Current Records DashBoard
  
 
ஆலயங்களின் எண்ணிக்கை 3331
அங்கீகரிக்கப்பட்ட ஆலயங்கள் 77
அங்கீகரிக்கப்படாத ஆலயங்கள் 3254
  ஆம் இல்லை
பதிவு செய்யப்பட்ட‌ ஆலயங்கள் 381 2950
மலேசிய இந்து சங்கம் பதிவுசெய்யப்பட்டது 1163 2168
மாநில வாரியாக ஆலயங்கள்
     ஜோகூர் 2
     கெடா 1
     கிளாந்தான் 0
     மலாக்கா 3
     நெகிரி செம்பிலான் 3
     பகாங் 0
     பினாங்கு 0
     பேராக் 16
     பெர்லிஸ் 0
     சபா 0
     சரவாக் 0
     சிலாங்கூர் 46
     திரங்கானு 0
     கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் 6
     லாபுவான் 0
 
         
     
Other Links
  
 

 
        
  
Counter
  
 
விருந்தாளி எண்
 
         
  
Latest News
  
 
பின் செல்

“ஆலய இடமாற்றம் இல்லை”, கணேசன் மறுப்பு

பேராக்கில் அவைத்தலைவரும் அவைத்தலைவரும் முதலில் சட்டமன்ற அதிகாரம் குறித்து மோதிக்கொண்டார்கள். இப்போது ஆலய விவகாரம் தொடர்பிலும் முட்டி மோதிக்கொள்கிறார்கள்.

கணேசன்பேரா சட்டமன்றத்தலைவரும் மஇகா மாநிலச் செயலாளருமான ஆர்.கணேசன், மாநிலத்தில் எந்தவோர் ஆலயமும் ஆலய நிர்வாகக் குழுவின் அனுமதியின்றி உடைக்கப்பட மாட்டாது என்று பேராக் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

“பாரிசான் அரசு, ஆலய இடமாற்றம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் ஆலயங்களை உடைக்காது”, என்றாரவர்.

பேராக்கில் ஆலயங்கள் உடைக்கப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்து அவர் இவ்வாறு கூறினார்.

“சமயம், ஆலயம் போன்றவை உணர்ச்சி வயப்பட வைக்கும் விவகாரங்கள் என்பதால் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அமைதியான தீர்வு காணவே நாங்கள் எப்போதும் முயன்று வருகிறோம்”, என்றவர் விளக்கினார்.

ஆலயங்கள் வலுக்கட்டாயமாக உடைக்கப்படுவதில்லை என்பதைக் கணேசன்  வலியுறுத்தினார்.

நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய பதவி இறக்கப்பட்ட பக்காத்தான் சட்டமன்றத் தலைவரும் திரோனோ சட்டமன்ற உறுப்பினருமான வி.சிவகுமார், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து ஆலயமொன்று இன்னும் 14 நாள்களுக்குள் இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகக் கூறியிருந்தார்.

பத்து காஜா, ஜாலான் தஞ்சோங் துவாலாங் வட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் நிர்வாகத்துக்கு இடத்தைக் காலி செய்யுமாறு பத்து காஜா மாவட்ட அலுவலகம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

முன்பு சாலை ஓரமாக இருந்த அந்த ஆலயம், மேம்பாட்டுப் பணிகளுக்கு இடமளிக்கும் வகையில் சாலையைவிட்டுத் தள்ளிக் கட்டப்பட்டதாக சிவகுமார் கூறினார்.

இப்போது மேம்பாட்டுப் பணிகளை முன்னிட்டு 14 நாள்களுக்குள் அங்கிருந்து ஆலயத்தை இடமாற்றம் செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பார்க்கும்போது பத்து காஜா வாழ் இந்துகளின் வழிபாட்டுத் தலமாக விளங்கும் அந்த வரலாற்றுப் பூர்வமான ஆலயத்தைத் தொலைதூர இடத்துக்கொண்டு செல்ல அவர்கள் திட்டமிடுவதாகத் தெரிகிறது என்று சிவகுமார் கூறினார். சிவகுமார்

இரண்டு காரணங்கள்

ஆலய இடமாற்றத்துக்கு பத்துகாஜா மாவட்ட அலுவலகம் இரண்டு காரணங்களைக் குறிப்பிட்டிருப்பதாக சிவகுமார் கூறினார். ஆலயம், அரசு நிலத்தில் சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ளது என்பது ஒரு காரணம். அத்துடன், இடைக்கால உரிமம் (டோல்) பெற்று சிறிய கடை ஒன்றை நடத்திவரும்  ஒருவர் செய்த புகார் மற்றொரு காரணமாகும். அவர் தமது கடையை மூன்று மாதங்களுக்கு முன்பு ஆலயத்துக்கு அருகில் கட்டினார்.

அதிகாரிகள், ஆயிரக்கணக்கான இந்துக்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கும் பழமை வாய்ந்த கோயிலுக்கு மதிப்புக் கொடுக்காமல் சில மாதங்களுக்குமுன் கட்டப்பட்ட ஒரு சிறிய கடைக்கு மதிப்பளிப்பது ஏன் என்று சிவகுமார் வினவினார்.

நேற்று சிவகுமாரும் கணேசனும் ஆலய நிர்வாகக்குழு உறுப்பினர் சிலருடன் தனித்தனியே கூட்டம் நடத்தினர். ஆனால், நிர்வாகக்குழுவின் முழுக்கூட்டத்தில்தான் ஆலயத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

பத்துகாஜா மாவட்ட அதிகாரியுடன் தாம் கலந்துரையாடியதாகவும், நிர்வாகக்குழுக் கூட்டம் நடத்தப்படும்வரை ஆலயத்தை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை நிறுத்திவைக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பதாகவும்  கணேசன் தெரிவித்தார்.


ஆதாரம் : ??????? ?????
தேதி : 10 December 2009, 06:25 PM


 
         
Contact US

Address : 50 A, Jalan Desa 1/1, Bandar Country Homes, 
48000 Rawang, Selangor.

Office : 03-6092 2248 (Tel)  /  03-6092 2249 (Fax)
Mr.Kannan : 012-6240 637
Email / Facebook id : myhindutemples@yahoo.com